search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி பலி"

    • திருமணமான 5 மாதத்தில் விபத்தில் இளம்பெண் பலியானார்.
    • தாடிக்கொம்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தாடிக்கொம்பு:

    வேடசந்தூர் அருகில் உள்ள குட்டம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் மனைவி கவுசல்யா(23). இவர்களுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. நேற்றிரவு கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென பைக்கில் பிரேக் போட்டபோது நிலைதடுமாறி கவுசல்யா கீழே விழுந்தார். படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

    தாடிக்கொம்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே இன்று காலை நடந்த சாலை விபத்தில் முன்னாள் எம்எல்ஏ சுந்தரவேல் அவரது மனைவி மற்றும் கார் டிரைவர் ஆகியோர் பலியாகினர். #RoadAccident #AKCSundarvel
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே கண்டெய்னர் லாரிக்குள் கார் புகுந்து நொறுங்கியதில் முன்னாள் எம்.எல்.ஏ., அவரது மனைவி, டிரைவர் பரிதாபமாக இறந்தனர்.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் சுந்தரவேல் (வயது 71). அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தற்போது தினகரன் அணியில் அ.ம.மு.க. நகர செயலாளராக உள்ளார்.

    இவரது மனைவி விஜயலட்சுமி (65). இருவரும் இன்று காலை காரில் சென்னை ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றனர். டிரைவர் வீரமணி (40) காரை ஓட்டிவந்தார்.

    காலை 6 மணிக்கு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூர் அருகே விண்ண மங்கலம் என்ற இடத்தில் வந்தபோது முன்னாள் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியை முந்திசெல்ல டிரைவர் முயன்றார்.

    அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி லாரிக்குள் புகுந்தது. கண்டெய்னர் லாரியின் அடிப்பகுதியில் கார் சிக்கியதால் நொறுங்கி தீப்பொறி பறந்தது.

    சுமார் 25 மீட்டர் தூரம் கார் இழுத்து செல்லப்பட்டது. அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர் திடீர் பிரேக் போட்டு லாரியை நிறுத்தினார்.



    கார் நொறுங்கியதால் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரவேல் அவரது மனைவி விஜயலட்சுமி, டிரைவர் வீரமணி இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் லாரிக்குள் கார் சிக்கியதால் உடல்களை மீட்கமுடியவில்லை.

    இதனையடுத்து ஆம்பூர் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கிரேன் மூலம் லாரியை நகற்றி காரை வெளியே கொண்டுவந்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 3 பேர் உடல்களும் மீட்கப்பட்டது.

    உடல்களை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆம்பூர் தாலுகா போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் பெங்களூரு-சென்னை மார்க்கத்தில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சுந்தரவேல் 1991-96 வரை திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் 2001 முதல் 2006 வரை திருப்பத்தூர் நகர மன்ற தலைவராகவும் இருந்தார். அவருக்கு 1 மகள் உள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ. இறந்த தகவலை அறிந்த அ.ம.மு.க.வினர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர் இறந்தது கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #RoadAccident #AKCSundarvel
    திருவாரூர் அருகே மருந்து என்று கூறி தம்பதியிடம் வி‌ஷத்தை கொடுத்த மர்ம நபரால் மனைவி பலியானார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Womankilled
    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள புலிவலம் விஷ்ணுதோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 75). விவசாயி. இவரது மனைவி சகுந்தலா (65). இவர்களது மகன் முருகேசன். திருவாரூரில் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் விஷ்ணுதோப்பில் உள்ள செல்வம் வீட்டுக்கு வந்தார். அப்போது வாடகைக்கு வீடு தேவைப்படுவதாகவும், தான் நாட்டு வைத்தியர் என்றும் கூறினார்.

    அந்த நபர் கூறியதை உண்மை என்று நம்பிய செல்வம் தனக்கும் மனைவிக்கும் மூட்டு வலி இருப்பதாக கூறி அதற்கு மருந்து இருந்தால் கொடுக்கும் படி கேட்டார்.

    இதையடுத்து அந்த நபர், செல்வத்திடம் வேப்பிலை, மஞ்சளை சேர்த்து அரைத்து வரும்படி கூறியுள்ளார். அவர்கள் அதனை கொண்டு வந்து கொடுத்ததும் அதில் தான் வைத்திருந்த ஒரு மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் கணவன்-மனைவி இருவரும் மயங்கி விட்டனர்.



    அப்போது அந்த நபர் மயங்கி விழுந்த சகுந்தலா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

    இந்தநிலையில் வீடு திரும்பிய செல்வத்தின் மகன் முருகேசன் தனது பெற்றோர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களது உடல்கள் வீங்கி போய் இருந்தன. இதனால் பயந்து போன அவர் தனது பெற்றோர்களை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

    அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை சகுந்தலா பரிதாபமாக இறந்தார். செல்வம் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சகுந்தலாவிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். மேலும் அவர் கொடுத்த நாட்டு மருந்தை சாப்பிட்டு சகுந்தலா பலியாகி விட்டதால் இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #Womankilled
    சரக்கு ஆட்டோ மோதி கணவன் கண் எதிரே மனைவி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர்-காங்கேயம் ரோடு பள்ளக்காட்டுபுதூர் சோளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 44). இவரது மனைவி ராதா (40). இவர் புதுக்காடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். 

    இந்த நிலையில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக விஜயகுமாரும், ராதாவும் ஒரு மோட்டார் சைக்கிளில் புதுக்காடு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை விஜயகுமார் ஓட்டினார். பின் இருக்கையில் ராதா அமர்ந்து இருந்தார். திருப்பூர் அருகே பள்ளக்காட்டுபுதூர் பஸ் நிறுத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருக்கும்போது, அந்த வழியாக தண்ணீர் ஏற்றிச்சென்ற சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கணவனின் கண் எதிரே ராதா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த விஜயகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் ஊரக போலீசார் விரைந்து சென்று ராதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கணவர் கண் முன்பே அவரது மனைவி பலியானார்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள ஓணான்டிபட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 31). சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி கவிதா (26).

    நேற்று இரவு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருமங்கலத்திற்கு புறப்பட்டனர். சாத்தங் குடி-கண்டுகுளம் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், கண்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் கணவர்-மனைவி உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த கவிதா கணவர் கண் முன்பே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடிய கண்ணன் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவமணி (31) ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் பகுதியில் காரைக்கால் மதகடி தெரு பகுதியை சேர்ந்தவர் தர்மபிரபு. இவரது மனைவி அமுதா. இவர்கள் இருவரும் அதிராம்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது பின்னத்தூர் வளைவு அருகே மணல் டிராக்டர் வந்து கொண்டிருந்தது. திடீரென மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் நேருக்குநேர் மோதியது. 

    இதில் சம்பவ இடத்திலேயே அமுதா தலை நசுங்கி பரிதாபமாக பலியானார். இதில் படுகாயம் அடைந்த அவரின் கணவர் தர்மபிரபுவை அப்பகுதியினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த எடையூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் அதன் டிரைவர் தம்பிக்கோட்டை மேலக்காடை சேர்ந்த முருகானந்தம்(24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சியில் தீ விபத்தில் கருகிய பேக்கரி கடை அதிபர் மனைவி பலியானார். அவரது கர்ப்பிணி மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிசிக்சை பெற்று வருகிறார்.
    திருச்சி:

    திருச்சி பாலக்கரை எடத்தெருவை சேர்ந்தவர் பால சேகர் (வயது 50). இவர் அதே பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மனைவி மல்லிகா (48). இவர்களுக்கு சுவாதி (27) என்ற மகள் உள்ளார்.

    நேற்று இரவு பாலசேகர் வெளியில் சென்றுவிட்டு கடையை பூட்டுவதற்காக வந்தார். அப்போது கடைக்குள் இருந்து புகை வந்தது. அதிர்ச்சியோடு உள்ளே சென்று பார்த்தபோது, கடைக்கு உள்ளே பிரிட்ஜ் இருந்த அறையில் மனைவி மல்லிகாவும், மகள் சுவாதியும் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் இருவரையும் காப்பாற்றிய பாலசேகர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். உடல் முழுவதும் எரிந்த நிலையில் தாய் மல்லிகாவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மல்லிகா இன்று காலை 7 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

    உடல் கருகிய சுவாதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு உடலில் 60 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடும் அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதலில் மல்லிகா அவரது மகள் சுவாதியுடன் உயிரோடு எரிக்கப்பட்டாரா? என்று சந்தேகம் எழுந்தது.

    ஏனென்றால் சுவாதிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் தங்கவேல் என்பவருக்கும் காதல் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது. இது சுவாதியின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் இரண்டு குடும்பத்திற்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தனித்தனியாக தங்களது வீடுகளில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் ரகசிய திருமணம் செய்த சுவாதி கர்ப்பமான நிலையில் பெற்றோர் வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று இரவு தாய் மல்லிகாவுக்கு உதவியாக பேக்கரியில் இருந்தபோது தான் இருவரும் தீயில் கருகியதாக கூறப்படுகிறது.

    எனவே இந்த சம்பவத்தில் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அவர்கள் உயிரோடு எரிக்கப்பட்டிருக்கலாமோ? என போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய தாய் மல்லிகா முதலாவது மேஜிஸ்திரேட் நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அதில் நேற்று இரவு 10 மணிக்கு பேக்கரியில் இருந்த பிரிட்ஜை அணைப்பதற்காக சுவிட்சை ஆப் செய்தபோது திடீரென மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் இருவரும் காயமடைந்ததாகவும் கூறியுள்ளார். மரண வாக்குமூலம் அளித்த அவர் இன்று காலை பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதனால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுவாதியை காதல் திருமணம் செய்ததாக கூறப்படும் ஆயுதப்படை போலீஸ்காரர் தங்கவேலுவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ×